Print this page

வேட்பாளர் வாகனத்தில் மோதி பாதசாரி பலி

ஐக்கிய மக்கள் சக்தியின் குருணாகலை மாவட்ட வேட்பாளர் ரிஷ்வி ஜவஹர்ஷாவிற்கு சொந்தமான கெப் ரக வாகனத்தில் மோதி பாதசாரியொருவர் உயிரிழந்துள்ளார்.

குளியாபிட்டி, கம்புராபொல பாடசாலை சந்திக்கு அருகில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

அதிக வேகத்தில் பயணித்த கெப் வாகனத்தில் மோதுண்ட நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.