Print this page

சிறுமி துஷ்பிரயோகம்- நபருக்கு மறியல்

திருகோணமலை, சம்பூர் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் 15 வயதுடைய சிறுமி ஒருவரை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக கூறப்படும் சந்தே நபரை, ஆகஸ்ட் மாதம் 6 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மூதூர் நீதிமன்ற நீதிவான் எம்.எஸ்.எம். சம்சுதீன் இன்று (30) உத்தரவிட்டுள்ளார்.

சின்னக்குளம், பள்ளிக்குடியிருப்பு, தோப்பூர், பகுதியைச் சேர்ந்த 26 வயதுடைய ஒருவரே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

குறித்த சந்தேக நபர், இத்திக்குளம் பகுதியிலுள்ள 15 வயதுடைய சிறுமியின் வீட்டுக்குச் சென்று தனிமையில் இருக்கும் போது துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியுள்ளதாக தெரிவித்து, சிறுமியின் பெற்றோர் சம்பூர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றை மேற்கொண்டனர்.

இதற்கு அமைய சந்தேக நபரை கைது செய்த பொலிஸார், மூதூர் நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்திய போதே குறித்த நபரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.