Print this page

கொரோனா தொற்றாளர்கள் 2,823 பேர் அதிகரிப்பு

நாட்டில் புதிதாக 08 கொரோனா தொற்றாளர்கள் நேற்றைய தினம் இனங்காணப்பட்டிருந்தனர்.

அதன்படி, நாட்டில் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 2823 ஆக அதிகரித்துள்ளது.

இவர்களில் ஒருவர் லங்காபுர புனர்வாழ்வு மத்திய நிலையத்தில் கொரோனா தொற்றுக்குள்ளான கைதியொருவருக்கு நெருக்கமானவர் எனவும் அவர் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டவர் எனவும் அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

ஏனைய 07 பேரும் ஐக்கிய அரபு இராச்சியத்தில் இருந்து இலங்கை வந்து தனிமைப்படுத்தப்பட்டவர்கள் என தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, கொரோனா வைரஸ் (கொவிட் 19) தொற்றுக்குள்ளான மேலும் 75 பேர் நேற்று (02) பூரணமாக குணம் அடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அதன்படி, 2514 பேர் முழுவதுமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாகவும் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

தற்போது, 298 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வரும் நிலையில் இதுவரை 11 கொரோனா நோயாளர்கள் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.