Print this page

சஜித் அணி பிளந்தது- திங்கள் வரை காலக்கெடு

சஜித் பிரேமதாஸ தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்திக்குள் பிளவு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஐக்கிய மக்கள் சக்தியில்  உறுதியளித்தபடி தேசிய பட்டியல் நியமனம் தரப்படாவிட்டால், தமுகூ (6), ஸ்ரீலமுகா (5), அஇமகா (4) ஆகிய சிறுபான்மை கட்சிகளின் 15 எம்.பிக்களும் பாராளுமன்றத்தில் தனிக்குழுவாக அமரும்.

ஐக்கிய மக்கள் சக்தி தலைமையகத்தில் இரவுவரை நடைபெற்ற பேச்சுவார்த்தையில் எச்சரிக்கை விடுக்கப்பட்டு, மனோ கணேசன், ரவூப் ஹக்கீம், ரிசாத் பதியூதீன் ஆகியோர் திங்கட்கிழமை வரை
காலக்கெடு விதித்துள்ளனர்.