ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமை பதவியிலிருந்து ரணில் விக்ரமசிங்க விலகுவதற்கு தீர்மானித்துள்ளார்.
இதனையடுத்து, கட்சியின் தலைமைப் பதவிக்கு தயா கமகே, அகில விராஜ் காரியவசம், ரவி கருணாநாயக்க மற்றும் வஜிர அபேவர்தன ஆகியோரின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் தெரிவித்துள்ளார்.
பொது தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சி வரலாறு காணாத தோல்வியை சந்தித்ததை தொடர்ந்து தலைமைப் பதவியிலிருந்து விலகுவதற்கு அவர் தீர்மானம் மேற்கொண்டுள்ளார் என தெரிவிக்கப்படுகிறது.
ஐக்கிய தேசிய கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவில் இடம்பெற்ற கட்சி முக்கியஸ்தர்களின் கூட்டத்தில் இந்த தீர்மானம் அறிவிக்கப்பட்டுள்ளதாக அக்கட்சியின் பொது செயலாளர் மேலும் தெரிவித்தார்.