Print this page

புதிய அமைச்சுகளின் விவரம்…

 

அமைச்சரவை அந்தஸ்துள்ள 28 அமைச்சுகள் மற்றும் 40 இராஜாங்க அமைச்சு பதவிகள் அடங்கிய அமைச்சரவையை விசேட வர்த்தமானி அறிவித்தல் ஊடாக ஜனாதிபதி அறிவித்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

ஜனாதிபதி மற்றும் பிரதமரால் பொறுப்பேற்கப்படும் அமைச்சுகளும் இதனுள் உள்ளடங்குகின்றன. குறித்த அதிவிசேட  வர்த்தமானி  ஜனாதிபதியினால் இன்று (10) பிற்பகல் அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. http://www.documents.gov.lk/files/egz/2020/8/2187-27_S.pdf

அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்கள் எதிர்வரும் 12ஆம் திகதி கண்டி தலதாமாளிகையில் உள்ள மண்டபத்தில் பதவியேற்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.