Print this page

இன்று கடமையேற்கிறார் மஹிந்த

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, அலரி மாளிகையில் இன்று(11) தனது கடமைகளை ஆரம்பிக்கவுள்ளார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் களனி ரஜமஹா விகாரையில் இவர் நேற்று முன்தினம் பிரதமராக சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார்.

குருநாகல் மாவட்டத்தில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன சார்பில் போட்டியிட்ட பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, ஆகக் கூடுதலான வாக்குகளை பெற்று இலங்கை வரலாற்றில் தேர்தலில் அதிகளவான விரும்பு வாக்கை பெற்றவர் என்ற பெருமையை கொண்டுள்ளார்.