Print this page

வடக்குக்கு வழங்க முடியாது - சரத் வீரசேகர

வட மாகாணசபைக்கு விசேட காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்கள் வழங்கப்படமாட்டாது என மாகாணசபைகள் மற்றும் உள்ளுராட்சி மன்றங்கள் இராஜாங்க அமைச்சர் சரத் வீரசேகர குறிப்பிட்டுள்ளார்.

மாகாணசபைகள் மற்றும் உள்ளுராட்சி மன்றங்கள் அமைச்சில் தனது கடமைகளைப் பொறுப்பேற்ற பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

வட.மாகாணத்துக்கென விசேட பொலிஸ் அதிகாரங்கள் வழங்கப்பட்டால் பொலிஸ்துறை துண்டாடப்படும் நிலை ஏற்படும் என சரத் வீரசேகர மேலும் தெரிவித்துள்ளார்.

எனவே வடக்கு மாகாணத்துக்கெனத் தனியாக காணி பொலிஸ் அதிகாரங்கள் வழங்கப்பட மாட்டாது என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.