Print this page

உறவுகளுக்காக அஞ்சலி

முல்லைத்தீவு வள்ளிபுனம் செஞ்சோலை சிறுவர் இல்லத்தில் நடாத்தப்படடட தாக்குதலில் உயிரிழந்த உறவுகளுக்கு இன்று யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் முன்பாக அமைந்துள்ள உலகத் தமிழர் பண்பாட்டு இயக்க வளாகத்தில் அஞ்சலி செலுத்தப்பட்டது.

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையில் நினைவஞ்சலி அனுஷ்டிப்பு இடம்பெற்றது.

முல்லைத்தீவு வள்ளிபுனம் செஞ்சோலை சிறுவர் இல்லத்தில் 2006ம் ஆண்டு நடாத்தப்பட்ட தாக்குதலில் 54 பள்ளிச் சிறுமிகள் உட்பட 61 பேர் உயிரிழந்தனர்.

உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் முகமாக நினைவுச் சுடரினை கட்சியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஏற்றி வைத்தார்.

அதன் பின்னர் கட்சி ஆதரவாளர்கள் தீபம் ஏற்றி அஞ்சலி செலுத்தினர்.