Print this page

காதலியின் மகளை கற்பழித்து கொன்றவர் கைது

 தென்னம் தோட்டத்தில் உள்ள வீடு ஒன்றுல் தனது தாயாருடன் வசித்து வந்த குறித்த சிறுமி தாயாரின் கள்ள காதலன் என கூறப்படும் தற்போது கைது செய்யப்பட்டுள்ள நபரால் கற்பழிக்கப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம், புத்தளம், ஆசிரிகம பகுதியில் 10 வயது சிறுமி ஒருவரை கற்பழித்து கொலை செய்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் இன்று (16) கைது செய்யப்பட்டுள்ளார்.

புத்தளம், பலாவி, பெரியகுளம் பகுதியை சேர்ந்த 41 வயதுடைய சிமியோன் அலோசியஸ் எனும் நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

பின்னர் குறித்த சிறுமியை அவரது தாயார் பாம்பு தீண்டியதாக தெரிவித்து புத்தளம் வைத்தியசாலையில் அனுமதிக்கும் போதே உயிரிழந்திருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவத்துடன் தொடர்புடைய நபர் தலைமறைவாக இருந்த நிலையில் இன்று கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.