புத்தசாசன அமைச்சுப் பதவியை ஜனாதிபதி வகிக்க வேண்டும் என அறிவித்து உத்தரவிடுமாறு கோரி சட்டத்தரணி அருண லக்சிறி உனவட்டுன, உயர் நீதிமன்றத்தில் இன்று (17) அடிப்படை உரிமை மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார்.
தற்போது ஜனாதிபதியிடம் காணப்படும் பாதுகாப்பு அமைச்சுப் பதவியை வேறொரு பாராளுமன்ற உறுப்பினரிடம் கையளிக்க தயாரிகியுள்ளமை குறித்து தமக்கு அறிய கிடைத்துள்ளதாக மனுதாரர் கூறியுள்ளார்.
அவ்வாறு செய்யுமிடத்து அந்த செயற்பாடும் புத்தசாசன அமைச்சும் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரிடம் கையளிப்பது அரசியல் அமைப்பை மீறுவதாக அமையும் என உத்தரவிடுமாறு மனுதாரர் கோரிக்கை விடுத்துள்ளார்.
ஏதேனும் ஒரு மாவட்டத்தின் வாக்காளர்களால் அல்லது தேசிபை் பட்டியலூடாக பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்படும் நபராக அன்றி முழு நாட்டு மக்களின் நேரடி வாக்குகளால் ஜனாதிபதி தெரிவு செய்யப்படுவதால், பாதுகாப்பு மற்றும் புத்தசாசன அமைச்சுப் பதவிகளை ஜனாதிபதி வகிப்பது அரசியல் அமைப்பின் பிரகாரம் ஏற்புடையது என மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.