Print this page

முதலாவது அமைச்சரவை கூட்டம் இன்று

பொதுத் தேர்தலின் பின்னர் தெரிவுசெய்யப்பட்ட அரசாங்கத்தின் புதிய அமைச்சரவையின் முதலாவது கூட்டம் இன்று (19) இடம்பெறவுள்ளது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் முற்பகல் 10.30 மணிக்கு அமைச்சரவை கூடவுள்ளதாக அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

ஒன்பதாவது நாடாளுமன்றத்தின் கன்னி அமர்வு நாளை (20) ஆரம்பமாகவுள்ளது.