களுத்துறை அழுத்கம பொலிஸ் நிலையத்தில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டில் இராணுவ சிப்பாய் ஒருவர் காயமடைந்துள்ளார்.
இச்சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றது என பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரது துப்பாக்கி தவறுதலாக இயங்கியத்தில் இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.
சம்பவத்தில் காயமடைந்த சிப்பாய் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்