Print this page

இலங்கைக்கு கிடைத்த பெருமை

கொரோனாவை கட்டுப்படுத்தி பாதுகாப்பாக மாணவர்களை பாடசாலைக்கு அழைத்து வந்த முதல் நாடாக இலங்கை பெயரிடப்பட்டுள்ளது.
இது தொடர்பில் யுனிசெப் நிறுவனம் இலங்கைக்கு பாராட்டுக்களை தெரிவித்துள்ளது.

யுனிசெப் நிறுவனத்தின் இலங்கை பிரதிநிதி விம் சுடன் அறிக்கை ஒன்றை வெளியிட்டு இதனை தெரிவித்துள்ளார்.

மாணவர்களின் கல்வி நடவடிக்கைக்கு சிறந்த இடம் பாடசாலை என அவர் குறிப்பிட்டுள்ளார். எனவே பாடசாலைகளை திறப்பது மிகவும் முக்கியமாகும்.

பாடசாலைகளை மூடப்பட்ட சந்தர்ப்பத்தில் கற்கை நடவடிக்கைகள் தொடர்ந்து இடம்பெற்ற போதிலும் கற்பதற்கான சிறந்த இடம் பாடசாலையாகும்.

எப்படியிருப்பினும் கொரோனா தடுப்பிற்கான சுகாதார வழிக்காட்டல்களை தொடர்ந்து பின்பற்றுமாறு அவர் மேலும் தெரிவித்துள்ளார்.