Print this page

12 ஆவது கொரோனா மரணம்-2, 947 ஆக உயர்வு

இலங்கையில் இன்று (23) காலை, 12ஆவது கொரோனா மரணம் ஏற்பட்டுள்ளது. 

இந்தியாவிலிருந்து வருகைதந்திருந்த 47 வயதான பெண்ணொருவரே, இவ்வாறு கொரோன தொற்றுக்கு உள்ளாகியிருந்தார்்.

அவருக்கு சிகிச்சையளிக்கப்பட்டது இதன்போதே, அவர் மரணமடைந்துள்ளார். 

கொழும்பு ஐடிஎச் வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வந்த 47 வயது பெண் ஒருவர் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை உயிரிழந்ததாக அந்த அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்தியாவில் இருந்து வந்த நிலையில் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்ட பெண்ணே உயிரிழந்துள்ளார்.

குறித்த பெண் புற்றுநோய் மற்றும் இருதய நோயாலும் பீடிக்கப்பட்டிருந்தாக தெரிவிக்கப்படுகிறது. இதுவரையில் இலங்கையில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 12 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் நால்வர் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் தொற்று கண்டறியப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 2, 947ஆக அதிகரித்துள்ளதாக தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

இவ்வாறு அடையாளம் காணப்பட்டவர்களில் இருவர் சென்னையில் இருந்து நாட்டுக்கு வந்தவர்க்ள எனவும், ஏனையவர்களில் ஒருவர் ஐக்கிய அரபு இராச்சியத்தில இருந்தும் மற்றையவர் அமெரிக்காவில் இருந்து நாடு திரும்பியவர்கள் எனவும் அரசாங்க தகவல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

இந்நிலையில், மேலும் 138 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதாக சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

Last modified on Wednesday, 26 August 2020 01:11