Print this page

ரிஷாட்டின் கட்சிக்குள் குழப்பம்

முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியூதீன் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸூக்குள் குழப்பகரமான நிலைமை ஏற்பட்டுள்ளது.

 சம்மாந்துறை பிரதேச சபையின் முன்னாள் தவிசாளரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் உயர்பீட உறுப்பினருமான ஏ.எம்.எம்.நௌஷாட், அக்கட்சியிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளார். அதனையடுத்தே, முரண்பாடுகள் ஏப்பட்டுள்ளன.

அவர், கட்சியாப்புக்கமைய இடைநிறுத்தப்பட்டுள்ளார் எனத் தெரிவித்துள்ள அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன், அதில் தவறில்லை என்றார்.