Print this page

இலங்கை சிறையில் 3 கைதிகள் தற்கொலை

இலங்கை சிறைகளில் கடந்த சில தினங்களில் 3 கைதிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.

சிறைச்சாலை ஆணையாளர் நாயகம் துஷார உப்புல்தெனிய இந்த தகவலை வெளியிட்டார்.

விஷேட அதிரடிப்படை சிறை பாதுகாப்பு மற்றும் சோதனைகளில் களமிறக்கப்பட்டுள்ளனர்.

இதனால் தினமும் கிடைக்கும் போதைப்பொருள் கிடைக்காத காரணத்தினால் ஏற்பட்ட மன உளைச்சலில் குறித்த கைதிகள் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் எனவும் ஆணையாளர் கூறியுள்ளார்.