Print this page

நரி தந்திரத்தை கையாண்டார் ரணில்

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, தன்னுடைய அரசியல் காய்நகர்த்தலை மிகவும் இறுக்கமாக கடைப்பிடித்து வருகிறார். இதனால், கட்சிக்குள் உள்வீட்டு முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளன என தகவல்கள் தெரிவிக்கின்றன. 

தேசிய பட்டியல் ஆசனம் அல்லது கட்சி தலைமை குறித்து ஒரு முடிவும் எட்டப்படாமலே ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழு கூட்டம் நிறைவு பெற்றுள்ளது.

தற்போதைய கட்சித் தலைவரும் முன்னாள் பிரதமருமான ரணில் விக்ரமசிங்க தலைமையில் ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழு இன்று (செவ்வாய்க்கிழமை) கூடியது.

ஒன்பதாவது நாடாளுமன்றத்தில் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் உறுப்பினர் தொடர்பான முடிவும், முன்னாள் சபாநாயகர் கரு ஜெயசூரிய கட்சியின் தலைமையை ஏற்கத் தயாராக இருப்பதாக அறிவித்தமை குறித்தும் கூட்டத்தில் விவாதிக்கப்படவிருந்தது.

இருப்பினும் எவ்வித முடிவும் எட்டப்படாமலேயே கட்சியின் செயற்குழுக்க கூட்டம் நிறைவு பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Last modified on Friday, 28 August 2020 01:36