விடுதலைப் புலிகளின் தலைவர் தமிழ் மக்களுக்காக போராடிய போதிலும் அவருக்கு பெருந்தோட்ட துறை மக்கள் ஆதரவளிக்கவில்லை என உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பிரதான சூத்திரதாரி சஹ்ரான் ஹாசிம் தெரிவித்ததாக கண்டி - நெல்லிகல பௌத்த சர்வதேச மத்திய நிலையத்தின் நிறுவனர் வத்துருகும்புரே தம்மரத்தன தேரர் தெரிவித்துள்ளார்.
அவ்வாறு அவர்கள் ஆதரவளித்திருந்தால் பெருந்தோட்ட மக்கள் இன்று பல துன்பங்களை அனுபவிக்க மாட்டார்கள் எனவும் சஹ்ரான் ஹாசிம் கூறியதாக வத்துருகும்புரே தம்மரத்தன தேரர் தெரிவித்துள்ளார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலையாகி சாட்சியம் வழங்கிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பான மேலதிக தகவல்களுடன் இன்னும் பல செய்திகளை உள்ளடக்கி வருகிறது இன்றைய தினத்திற்கான மதிய நேர முக்கிய செய்திகளின் தொகுப்பு,