Print this page

கருவுக்கும் சிக்கல்

முன்னாள் சபாநாயகர் கருஜெயசூரிய ஐக்கியதேசிய கட்சியின் தலைமை பொறுப்பை ஏற்பது குறித்து விருப்பம் தெரிவித்துள்ள போதிலும் அவர் தலைவராவதற்கான வாய்ப்புகள் இல்லை என ஐக்கியதேசிய கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

நேற்று (25) இடம்பெற்ற ஐக்கியதேசிய கட்சியின் செயற்குழு கூட்டத்தில் கட்சியின் தலைமைப்பதவிக்கு போட்டியிடுபவர்கள் கட்சியில் பதவியொன்றை வகிக்கவேண்டும் அல்லது செயற்குழுவில் இடம்பெற்றிருக்கவேண்டும் என தீர்மானித்துள்ளது என கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

கருஜெயசூரிய இரு பதவிகளையும் வகிக்காததன் காரணமாக அவர் தலைமை பதவிக்காக போட்டியிடுவதற்கான தகுதியை இழந்துள்ளார்.

செயற்குழுவின் தீர்மானத்தை தொடர்ந்து கருஜெயசூரிய தலைமைப்பதவிக்கு போட்டியிடுவதற்கான வாய்ப்புகள் அற்றுப்போயுள்ளன என கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.