Print this page

ஆரம்ப அறிக்கை அமைச்சரவைக்கு


நாடளாவிய ரீதியில் ஏற்பட்ட மின்தடை குறித்து ஆராய்வதற்காக நியமிக்கப்பட்டுள்ள குழுவின் ஆரம்ப அறிக்கை இன்று அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட உள்ளது.

கெரவலப்பிட்டிய பிரதான மின்விநியோகக் கட்டமைப்பில் ஏற்பட்ட திடீர் கோளாறு காரணமாக, நாடளாவிய ரீதியில் கடந்த 17 ஆம் திகதி 8 மணிநேர மின்தடை ஏற்பட்டது.

இந்த நிலையில், திடீர் மின்தடை குறித்துஆராய்வதற்காக மின்சக்தி அமைச்சர் டலஸ் அழகப்பெருமவின் ஆலோசனைக்கமைய நால்வர் அடங்கிய குழுவொன்று நியமிக்கப்பட்டிருந்தது.

குறித்த குழுவின் ஆரம்ப அறிக்கை மின்சக்தி அமைச்சர் டலஸ் அழகப்பெருமவிடம் நேற்று முன்தினம் கையளிக்கப்பட்டிருந்தது.

இதனை அடுத்து, அமைச்சர் டலஸ் அழகப்பெருமவினால் குறித்த ஆரம்ப கட்ட அறிக்கை நேற்றைய தினம் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டிருந்தது.