Print this page

அதிருப்தியாளர்களை வலைக்கிறது அரசு- பரிசு வழங்கியது

அமைச்சுப்பதவிகள், இராஜாங்க அமைச்சுப் பதவிகள் கிடைக்காமையால், ஆளும் கட்சியைச் சேர்ந்த முன்னாள் சிரேஷ்ட அமைச்சர்கள் கடும் அதிருப்தியடைந்துள்ளனர்.

அவர்களை சமாளிக்கும் வகையில், ​அமைச்சரவையில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கைகளை எடுத்துள்ளது.

அந்தவகையில், சிரேஷ்ட உறுப்பினர்களில் ஒருவரான, சுசில் பிரேமஜயந்தவுக்கு  இராஜாங்க அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது.

கல்வி மறுசீரமைப்பு, திறந்த பல்கலைக்கழகங்கள், தொலைக்கல்வி மேம்பாட்டு இராஜாங்க அமைச்சராக சுசில் பிரேமஜயந்த ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்துகொண்டார்.

 

பதவிப் பிரமாண நிகழ்வு இன்று (26) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் மற்றும் ஜனாதிபதியின் செயலாளர் பி.பீ ஜயசுந்தர ஆகியோர் இதன்போது பிரசன்னமாகியிருந்தனர்.

இதேவேளை, கடந்த அரசாங்கங்களில் சுசில் பிரேமஜயந்த, அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சராக பதவி வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.