Print this page

அமைச்சுகளில் அதிரடியாக கையை வைத்தார் கோத்தா

பொதுத் தேர்தலுக்குப் பின்னர் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ, அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்களை நியமித்தார்.

நேற்றையதினமும் புதிய இராஜாங்க அமைச்சர் ஒருவர் நியமிக்கப்பட்டார்.

முன்னதாக விஜயதாஸ ராஜபக்ஷவுக்கு வழங்கப்படவிருந்த இராஜாங்க அமைச்சுப் பதவியே, சுசில் பிரேமஜயந்தவுக்கு நேற்றையதினம் வழங்கப்பட்டுள்ளது.

தனது இராஜாங்க அமைச்சு பதவி வேண்டாம். அமைச்சு பதவியே வேண்டுமென விஜயதாஸ ராஜபக்ஷ அன்றையதினம் கண்டியிலிருந்து வெளியேறினார்.

இந்நிலையில், கல்வி மறுசீரமைப்பு, திறந்த பல்கலைக்கழகங்கள் மற்றும் தொலைக்கல்வி அபிவிருத்த இராஜாங்க அமைச்சராக சுசில் பிரேமஜயந்த நியமிக்கப்பட்டுள்ளார்.

இதேவேளை, அமைச்சுகள் மற்றும் இராஜாங்க அமைச்சுகளில் மேலதிக செலுவுகளை வெட்டிவிடுமாறு சகல அதிகாரிகளுக்கும் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ, அதிரடியாக நேற்று (26) உத்தரவொன்றை பிறப்பித்துள்ளார்.