Print this page

தங்கத்தின் விலை குறைந்தது

இலங்கை சந்தையில் தங்கத்தின் விலை குறைவடைந்துள்ளதாக சந்தை தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.

அதற்கமைய தற்போது 22 கரட் தங்கத்தின் விலை 91000 ரூபாவாக பதிவாகியுள்ளது. 24 கரட் தங்கத்தின் விலை 99000 ரூபாவாக பதிவாகியுள்ளது.

கொரோனா வைரஸ் பரவலின் போது இலங்கை சந்தையில் தங்கத்தின் விலை பாரியளவு அதிகரித்துள்ளது.

அதற்கமைய கடந்த 8ஆம் ஆம் திகதி வரையில் இலங்கையைில் தங்கத்தின் விலையில் பாரிய அதிகரிப்பு ஏற்பட்டிருந்தது.

22 கரட் தங்கத்தின் விலை 100500 ரூபாவாக பதிவாகியிருந்த நிலையில் 24 கரட் தங்கத்தின் விலை 109500 ரூபாயாக பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.