Print this page

வரவு - செலவுத் திட்டத்தை நினைத்தாலே நடுக்கம்

February 21, 2019

அரசாங்கத்தில் உள்ளவர்களுக்கு வரவு - செலவுத் திட்டம் நினைவுக்கு வரும்போது அவர்களது கால்கள் நடுங்குவதாக ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று (11) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைக் கூறினார்.

அவர் அங்கு தொடர்ந்து கூறுகையில், எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஸ கடந்த வருடம் பிரதமரான நிலையில், அவருக்கு எதிராக நீதிமன்றில் முன்வைத்த மனுவில் 122 பேர் கையெழுத்திட்டனர்.

அது, பின்னர் 117 ஆக குறைந்ததுடன், இன்று 103 மாத்திரமே காணப்படுகின்றது. வரவு - செலவுத் திட்டத்தை நினைக்கும் போது ஆளும் தரப்பு உறுப்பினர்களின் கால்கள் நடுங்குகின்றன'  என்றார்.

Last modified on Thursday, 21 February 2019 12:05