Print this page

சஜித்- ரணில் அணிகள் முக்கிய பேச்சு?

ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி ஆகியன ஒன்றிணைந்து செயற்படுவது தொடர்பில் மற்றுமொரு கலந்துரையாடல் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் இரண்டுவார காலப்பகுதிக்குள் குறித்த கலந்துரையாடல் இடம்பெறவுள்ளதாக கட்சித் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதற்கமைய ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க மற்றும் ஐக்கிய மக்கள் சக்தியின்  தேசிய அமைப்பாளர் நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தனாயக்க ஆகியோருக்கிடையில் குறித்த தீர்மானமிக்க  கலந்துரையாடல் இடம்பெறவுள்ளதாக  தெரியவந்துள்ளது.

இதனிடையே ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி ஆகியன ஒன்றிணைந்து செயற்படுவது தொடர்பில் குறித்த இருவருக்கும் இடையில் கடந்த வாரம் இடம்பெற்ற கலந்துரையாடல் எதுவித தீர்மானங்களும் இன்றி நிறைவடைந்தமை குறிப்பிடத்தக்கது.