Print this page

மின்னல் தாக்கியதில் 17 பசுக்கள் பலி

September 02, 2020

நேற்றிரவு முதல் அதிகாலை வரையிலும் கடுமையான மழை பெய்தது. 

இந்த மோசமான வானிலை இன்னும் சில நாட்களுக்கு நீடிக்குமென வானிலை அவதான நிலையம் அறிவித்துள்ளது. 

மட்டக்களப்பு – வாகரை மாவடி ஓடை பகுதியில் மின்னல் தாக்கத்தினால் பண்ணையாளர் ஒருவரின் 27 பசுக்கள் உயிரிழந்துள்ளன.

மாவடி ஓடை பகுதியில் இன்றிரவு இடியுடன் கூடிய மழை பெய்துள்ளது. இதன்போது மின்னல் தாக்கத்தினால் தமது 27 பசு மாடுகள் இறந்துள்ளதாக பண்ணையாளரான தம்பி ஐயா ரஞ்சன் தெரிவித்தார்.

இந்த சம்பவம் அந்தக் குடும்பத்தையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இறந்த பசு மாடுகளின் உடலங்களை பெக்கோ இயந்திரத்தைப் பயன்படுத்தி கடற்படையினர் புதைத்தனர்.