Print this page

துமிந்தவின் வழக்கு தூசி தட்டப்படுகிறது

September 03, 2020

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவுக்கு எதிரான வழக்கின் தீர்ப்பை மீண்டும் ஆராய்வதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன என தகவல்கள் தெரிவித்துள்ளன.

அரசியல்வாதிகளுடன் கலந்துரையாடிய பின்னரே, துமிந்த சில்வாவுக்கு அந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது எனவும் அதனால், தீர்ப்பு ஆராயப்படவுள்ளது என அறியமுடிகின்றது.

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பாரத லக்ஷ்மன் பிரேமசந்திரவின் படுகொலை வழக்கில், குற்றவாளியாக இனங்காணப்பட்டிருந்த துமிந்த சில்வாவுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டு தீர்ப்பளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.