Print this page

ஜனாதிபதியின் விஷேட உத்தரவு

September 03, 2020

வாரந்தோரும் வரும் புதன்கிழமைகளை பொது மக்களின் பிரச்சினைகள் குறித்து ஆராயும் தினமாக மாற்றுவதுடன், அதற்காக அனைத்து அமைச்சர்கள் மற்றும் அரச ஊழியர்கள் செயற்பட வேண்டும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.

பொதுமக்கள் சந்திப்பு இடம்பெறும் புதன் கிழமைகளில் சகல அமைச்சர்களும் தமது அமைச்சுக்களில் கட்டாயம் இருக்க வேண்டும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ நேற்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்திலேயே கண்டிப்பான உத்தரவு பிறப்பித்துள்ளார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அமைச்சரவை இணைப்பேச்சாளர் ரமேஷ் பத்திரன இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார்.

அத்துடன் இராஜாங்க அமைச்சர்கள் மற்றும் அரச அதிகாரிகளும் அமைச்சுக்களில் இருக்க வேண்டும் என ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளார்.

மக்கள் சந்திப்பு தினங்களில் அரச அதிகாரிகள் மக்கள் சந்திப்பு இடம்பெறும் புதன் கிழமை நாட்களில் அமைச்சுக்களில் இருப்பதில்லை என அமைச்சர்கள் சிலர் ஜனாதிபதியிடம் முறையிட்டுள்ளனர்.

மக்களால் முன்வைக்கப்படும் முறைப்பாடுகளுக்கு உடனடியாக தீர்வுகளை வழங்க வேண்டும் எனவும் ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளார்.