Print this page

வௌியானது விஷேட வர்த்தமானி

September 03, 2020


அமைச்சரவை அனுமதி கிடைக்க பெற்ற 20 ஆம் திருத்தச் சட்டமூலம் வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்டுள்ளது.

20 ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டமூல வரைபு நேற்றைய தினம் நீதி அமைச்சர் அலி சப்ரியினால் அமைச்சரவையில் முன்வைக்கப்பட்டிருந்தது.

இதன்போது 20 ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டத்திற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியிருந்தது.

எதிர்வரும் இரு வாரங்களுக்குள் 20 ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டம் பாராளுமன்றத்தில் முன்வைக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.