Print this page

“முட்டை பூசி” பிச்சை எடுத்த ஜோடி கைது

September 05, 2020

உடல் முழுவதும் தீ காயங்கள் ஏற்பட்டுள்ளதைப் போல காண்பித்து, பிச்சையெடுத்த ஜோடியொன்று கைதுசெய்யப்பட்டுள்ளது.

அந்த ஜோடிக்கு உண்மையிலேயே தீ காயங்கள் ஏற்படவில்லை. தீ காயங்கள் ஏற்பட்டுள்ளதைப் போல முட்டையை அந்த ஜோடியினர் பூசிக்கொண்டிருந்துள்ளனர். 

முட்டையில் வெள்ளைக் கருவை மட்டுமே அவர் பூசியுள்ளதாக தெரிவித்துள்ளார். 

திட்டமிட்டு இவ்வாறு பிச்சையெடுக்கும் இந்த ஜோடி, கெக்கிராவ பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நன்கு திட்டமிட்டு, ஒருங்கிணைக்கப்பட்டுள்ள குழுவொன்றை இவ்வாறு பிச்சையெடுப்பதற்கான வழிவகைகளை செய்துகொண்டுதுள்ளனர் என அறியமுடிகின்றது.

இன்னும் சிலர், பிச்சை எடுப்பதற்காக, வாகனமொன்றின் ஊடாக, அனுராதபுரத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக அந்த ஜோடியினர் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட இருவரின், ஆண் பிச்சைக்காரர் கொழும்பு பாபர் வீதியைச் சேர்ந்த மொஹமட் இக்பார் (வயது 43) என்றும் மற்றையவர் துஷாரி தமயந்தி ( வயது 43) என்றும் இனங்காணப்பட்டுள்ளனர். 

இவ்விருவரையும் கெக்கிராவ நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுது்திய போது, எதிர்வரும் 16ஆம் திகதி வரையிலும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார். 

Last modified on Saturday, 05 September 2020 01:10