Print this page

மஹிந்தவின் 20க்கு விதுரவும் எதிர்ப்பு

September 05, 2020

இரட்டை குடியுரிமை கொண்டவர் நாடாளுமன்ற உறுப்பினராகுவது தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலானது என்று இராஜாங்க அமைச்சர் விதுர விக்ரமநாயக்க தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மேலும்,

“இரட்டை குடியுரிமை கொண்ட நபர் அரச உயர் பதவிகளை வகிப்பதால் எவ்வாறான விளைவுகள் ஏற்படும் என்பதை மத்திய வங்கி பிணைமுறி மோசடி விவகாரத்தின் ஊடாக தெரிந்து கொள்ள வேண்டும்.

இரட்டை குடியுரிமை உடையோர் தேர்தலில் போட்டியிட முடியாது சன்ற தடை நீக்கப்பட்டுள்ளமை அரசாங்கத்தில் தற்போது மாறுப்பட்ட நிலைப்பாட்டை தோற்றுவித்துள்ளது.

இரட்டை குடியுரிமை கொண்டவர் தேர்தலில் போட்டியிடுவதற்கு அரசியலமைப்பின் 19வது திருத்தத்தில் ஏற்படுத்தப்பட்ட தடை அரசியலமைப்பின் 20வது திருத்த மூல வரைபில் நீக்கப்ட்டமை எதிர்ப்புக்குரியது.

20வது திருத்தத்தில் பல விடயங்கள் சாதகமாக காணப்பட்டாலும். இரட்டை குடியுரிமை உள்ளவருக்கு சாதகமாக ஏற்பாடுகள் ஏற்படுத்தியுள்ளமை தவறான தீர்மானமாகும் – என்றார்.