Print this page

மஹிந்தவுக்கு எதிராக “தேசியபட்டியல்” வழக்கு

September 05, 2020

அபேஜன பலவேகய கட்சியின் தேசிய பட்டியல் விவகாரத்தில்   தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர், ஆணைக்குழுவின் உறுப்பினர்கள், சட்டமாதிபர், அத்துரலியே ரத்ன தேரர் மற்றும் வேதிரிகம விமல திஸ்ஸ தேரருக்கு எதிராக உயர்நீதிமன்றில் அடிப்படை உரிமை மீறல் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக அபேஜனபல வேகய கட்சியின் தலைவர் சமன் பெரேரா தெரிவித்தார்.

பொதுஜனபல சேனா காரியாலயத்தில் இன்று வெள்ளிக்கிழமை இடம் பெற்ற ஊடகவிஜயலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையிலேயேஅவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அபேஜனபல வேகய கட்சிக்கு கிடைக்கப் பெற்ற  ஒரு தேசிய பட்டியல் ஆசனம் யாருக்கு வழங்கப்பட வேண்டும் என கட்சியின்   செயற்குழு எடுத்த தீர்மானத்தை தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு  உத்தியோகப்பூர்வமாக அறிவித்தோம். 

ஆனால் எமது தீரமானத்தை பொருட்படுத்தால் தேர்தல்கள் ஆணைக்குழு தேசிய பெயர் பட்டியலை வர்த்தமாயில் வெளியிட்டுள்ளமை தவறான  செயற்பாடாக கருதவேண்டும்.

இந்த சம்பவத்துக்கு நியாயம் பெற்றுக் கொள்ளும் விதமாகவே   உயர்நீதிமன்றில் அடிப்படை உரிமை மீறள் வழக்கு தாக்கல் செய்துள்ளதாகவும் அவர் கூறினார்.