Print this page

பொதுக் கழிப்பறையில் மாணவிகளுக்கு தொல்லை

September 06, 2020

கண்டி நகரில் பொது கழிப்பறைக்குள் பாடசாலை மாணவிகளை பாலியல் துன்புறுத்தல் மேற்கொள்ளும் கும்பல் ஒன்று கைது செய்யப்பட்டுள்ளது.

கண்டி பொலிஸ் தலைமை அதிகாரிகளினால் இந்த குழுவினர் கைது செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

கண்டி பிரதேச பாடசாலைகளில் கற்கும் மாணவிகள் மற்றும் மேலதிக வகுப்புகளுக்கு செல்லும் மாணவர்கள் பொது கழிப்பறைக்கு செல்லும் போது இந்த குழுவினர் மாணவிகளை அச்சுறுத்தி பலவந்தமாக துஷ்பிரயோகம் செய்துள்ளதாக தெரியவந்துள்ளது.

இந்த சம்பவத்திற்கு முகம் கொடுத்த மாணவிகள் சிலர் சம்பவம் தொடர்பில் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சுதத் மாசிங்கவிடம் தெரியப்படுத்தியுள்ளனர்.

அதற்கமைய 6 பேர் கொண்ட கும்பல் ஒன்று கைது செய்யப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்டவர்களுக்குள் ஆசிரியர் ஒருவரும் உள்ளடங்குவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் தொடர்பில் சட்ட ரீதியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படகின்றது.