Print this page

பயங்கரவாத விவகாரம் -கோத்தா அதிரடி வர்த்தமானி

September 07, 2020
The Tangalle old prison will be used as a detention center for those involved in terrorism The Tangalle old prison will be used as a detention center for those involved in terrorism

பயங்கரவாதத்துடன் தொடர்புபட்டவர்களை தடுத்து வைப்பதற்குரிய நிலையமாக தங்காலை பழைய சிறைச்சாலை பயன்படுத்தப்படவுள்ளது.

இதற்கான வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

1982 ஆண்டு இலக்கம் 10 யின் கீழான பயங்கரவாதததை தடுக்கும் (தற்காலிக விசேட ஏற்பாடுகள்) (திருத்தம்) சட்டத்துடன் வாசிக்கப்பட வேண்டிய 1979 ஆண்டு இலக்கம் 48 யின் கீழ் பயங்கரவாதத்தை தடுக்கும் (தற்காலிக) ஒழுங்கு விதிகள் சட்டததின் 15 ஆவது சரத்தின் கீழ் தமக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

அந்த அதிகாரத்திற்கு அமைவாக அந்த சரத்தில் கூறப்பட்டுள்ள பணிகளுக்காக - தங்காலை பழைய சிறைச்சாலையை பயங்கரவாதத்துடன் தொடர்புபட்டவர்களை தடுத்து வைக்கும் இடமாக அறிவிக்ப்பட்டுள்ளது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் உத்தரவிற்கு அமைய, பாதுகாப்புச் செயலாளர் மேஜர் ஜெனரல் கமல் குணரட்ன, இதற்குரிய வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளார்.

Last modified on Monday, 21 September 2020 02:17