Print this page

நடுவரின் கழுத்தை பதம்பார்த்த வீரர் (வீடியோ)

September 07, 2020

அமெரிக்கப் பொதுவிருதில் உதவி நடுவரைப் பந்தால் அடித்த காரணத்தால் உலக டென்னிஸ் தரவரிசையின் ஆண்கள் பிரிவில் முதலிடத்தில் உள்ள செர்பியாவின் நோவாக் ஜோக்கோவிச் வெளியேற்றப்பட்டுள்ளார்.

ஆட்டத்தின் நடுவில் ஜோக்கோவிச் தம் கால்சட்டையில் இருந்து ஒரு பந்தை யதார்த்தமாக வெளியே எடுத்து அடித்தார். அது உதவி நடுவரின் கழுத்தைப் பதம்பார்த்தது.

அடிவாங்கிய உதவிநடுவர் வலியால் துடித்துப்போக ஜோக்கோவிச்சை ஆட்டத்திலிருந்து வெளியேற்றுவதாக ஆட்டத்தின் நடுவர் அறிவித்தார்.

Last modified on Monday, 07 September 2020 10:51