Print this page

சௌதியில் உள்ள இலங்கையர்களுக்கு சலுகை

September 08, 2020

சௌதி அரேபியாவில் வீசா முடிவுற்ற நிலையில் தங்கியுள்ள இலங்கையர்கள் எவ்வித கட்டணம் அல்லது தண்டப்பணத்தை செலுத்தாமல் நாட்டை விட்டு வௌியேற சௌதி அரேபிய அரசு உத்தரவிட்டுள்ளது.

கொவிட் 19 தொற்று காரணமாக சௌதி அரேபியவில் இருந்து வௌியே முடியாமல் உள்ள இலங்கையர்கள் எதிர்கொள்ளும் சிக்கல்களை கவனத்திற் கொண்டு சௌதி அரேபிய அரசு தற்காலிகமாக இந்த நடவடிக்கையை முன்னெடுத்துள்ளதாக வௌிநாட்டு அலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளது.

இரு நாடுகளுக்கிடையில் உள்ள நல்லுறவின் காரணமாக இந்த சலுகை வழங்கப்பட்டுள்ளது.