Print this page

தூக்கி அடித்த தோனி... (வீடியோ)

September 11, 2020

ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடர் தொடங்குவதற்கு இன்னும் 8 நாட்களே இருக்கின்றன.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றினையும், படம் ஒன்றினையும் பதிவிட்டுள்ளது.

சிஎஸ்கே வெளியிட்ட வீடியோ தான் வெறித்தனமாக உள்ளது. அதில் தோனி தனக்கு வீசப்பட்ட பந்தினை சிக்ஸருக்கு விளாசுகிறார்.

தோனி சிக்ஸர் விளாசிய வீடியோ ஏற்கனவே நிறைய வெளியாகியிருக்கின்றன. இருப்பினும், இந்த வீடியோ சற்றே வித்தியாசமானது.

ஏனெனில் தோனி அடிக்கும் பந்து மைதானத்திற்கு வெளியே ஏதோ ஒரு மரங்களுக்கு நடுவில் சென்று விழுகிறது. பந்து எல்லைக்கோட்டிற்கு வெளியே சென்று விழும்போதே பந்து தொலைந்துவிட்டது என ஒரு வீரர் பின் குரலில் சொல்லுகிறார்.

தோனி சிக்ஸருக்கு விளாசிய பந்து எல்லைக் கோட்டிற்கு வெளியே தொலைந்து போனது ரசிகர்களுக்கு புதிய உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Last modified on Friday, 11 September 2020 10:14