Print this page

வைத்தியசாலையில் தற்கொலைக்கு முயன்ற சிறுமி

September 14, 2020


வவுனியா வைத்தியசாலையில் தற்கொலை செய்துகொள்ள முயற்சித்த சிறுமியால் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டிருந்தது. இந்த சம்பவம் நேற்றையதினம் இடம்பெற்றிருந்தது.

குறித்த சிறுமி வைத்தியசாலையின் இரண்டாவது மாடிக்கட்டடத்தில் ஏறி கீழே குதிக்க போவதாக தெரிவித்த நிலையில், விரைந்து செயற்பட்ட வைத்தியசாலை ஊழியர்கள் மாடிக்கட்டடத்தில் ஏறி சிறுமியை மீட்டிருந்தனர்.

ஈச்சங்குளம் பகுதியை சேர்ந்த 15 வயதான சிறுமியே இவ்வாறு தற்கொலைக்கு முயற்சிசெய்துள்ளார்.

காதல் விவகாரத்தினாலேயே தான் தற்கொலைக்கு முயன்றதாக குறித்த சிறுமி அங்கிருந்தவர்களிடம் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவத்தால் வவுனியா வைத்தியசாலையில் சற்றுநேரம் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது