Print this page

யாழில் பரபரப்பு சிவாஜி கைது

September 15, 2020

தமிழ்த் தேசியக் கட்சியின் செயலாளர் நாயகமும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.கே. சிவாஜிலிங்கம் கோப்பாயில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

இதனால் யாழில் பெரும் பரபரப்பான நிலைமையொன்று ஏற்பட்டுள்ளது.

தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினரான திலீபனின் நினைவேந்தல் நிகழ்வை ஏற்பாடு செய்தமைக்காக, அவர் இவ்வாறு கைது செய்யப்பட்டதாக, தெரிவிக்கப்படுகிறது.

திலிபனின் நினைவேந்தல் நிகழ்வினை நடத்துவதற்கு எதிராக யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றம் நேற்றைய தினம் தடையுத்தரவினை பிறப்பித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது