Print this page

நினைவேந்தல் வளைவுகளையும் விட்டுவைக்கவில்லை

September 15, 2020

யாழ்ப்பாணம் – நல்லூர் மற்றும் யாழ். பல்கலைக்கழக வளாகப் பகுதிகளில் தியாக தீபம் திலீபன் நினைவாக அமைக்கப்பட்டிருந்த திருவுருவப்படங்கள், நினைவு வளைவுகளைப் பொலிஸார் அகற்றிக்கொண்டு சென்றுள்ளனர்.

தியாக தீபம் திலீபனின் 33ஆம் ஆண்டு நினைவேந்தலின் முதல் நாள் இன்றாகும். திலீபன் நினைவேந்தலை நடத்துவதற்கு தடை விதிக்குமாறு யாழ். நீதிமன்றில் பொலிஸார் தாக்கல் செய்த வழக்கை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம் நிகழ்வுகளைத் தடை செய்து நேற்று உத்தரவிட்டிருந்தது.

இந்தநிலையில் நேற்று நள்ளிரவில் குறித்த நினைவேந்தல் வளைவுகள் மற்றும் திருவுருவப்படங்கள் பொலிஸாரால் அகற்றப்பட்டுள்ளன.