Print this page

ஆமையை விழுங்க முயன்ற முதலை - (வீடியோ)

September 16, 2020


ஆமை ஓடு மிகவும் வலிமையானது என நம் அனைவருக்கும் தெரியும். ஆனால் எவ்வளவு வலிமையானது என தெரியாது.

ஒரு முதலையின் தாடையைவிட வலிமையானதா என்ற கேள்விக்கு பதில் தருகிறது ஒரு வீடியோ.

இந்திய வருவாய் சேவை அதிகாரி நவீத் ட்ரம்பூ, சுவாரஸ்யமான வீடியோ க்ளிப் ஒன்றை பகிர்ந்துள்ளார்.

வெறும் 18 நொடிகள் மட்டுமே வரும் அந்த வீடியோவில், முதலை ஒன்று ஆமையை விழுங்க முயற்சிக்கிறது. அதன் தாடை வலிமையைக்கொண்டு ஆமை ஓட்டை உடைக்க முயற்சிக்கிறது.

ஆனால் முதலையால் முடியவில்லை. இறுதியில் முதலையிடமிருந்து ஆமை சாதுர்யமாக தப்பித்து சென்றுவிடுகிறது.