Print this page

ஷானிக்கு தொடர்ந்தும் விளக்கமறியல்

September 17, 2020

சாட்சிகளை மறைத்த குற்றச்சாட்டை எதிர்கொண்டுள்ள குற்றப் புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பணிப்பானரான ஷானி அபேசேகரவுக்கு தொடர்ந்தும் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.

கம்பஹா நீதவான் நீதிமன்றில் அவர் இன்று பகல் ஆஜர்படுத்தப்பட்டார்.

வழக்கை விசாரணை செய்த நீதவான், அவரை தொடர்ந்தும் எதிர்வரும் ஒக்டோபர் 02ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.