Print this page

மஞ்சளுடன் 10 பேர் மாட்டினர்

September 18, 2020

கொழும்பு புளூமண்டல் பகுதியில் சட்டவிரோதமாக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 33000 கிலோ மஞ்சள் கைப்பற்றப்பட்டுள்ளது.

இவற்றை பதுக்கி வைத்திருந்த 10 பேரையும் பொலிஸார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.

மேலும் இந்த களஞ்சிய சாலையில் இருந்து 3 கண்டேனர் கொள்கலன்களும், 3000 உழுந்தும் கைப்பற்றப்பட்டுள்ளன.