Print this page

சரியாக கணிப்பிட்டார் மத்தும பண்டார

September 20, 2020

இருபதாவது அரசமைப்புத் திருத்தத்துக்கு 2/3 பெரும்பான்மை ஒருபோதும் கிடைக்காதெனவும், அந்த திருத்தத்துக்கு எதிரான சகல நடவடிக்கைகளையும் மேற்கொள்வோம் என்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.

இருவதாவது அரசமைப்பை பயன்படுத்திக்கொண்டு, அமெரிக்க பிரஜையான ஒருவர் அமெரிக்க கொடியின் முன்பாக சத்தியப்பிரமாணம் செய்துகொண்ட ஒருவர், இலங்கையிலுள்ள சொத்துக்களை சூறையாடிக்கொண்டு அமெரிக்காவுக்கு ஓடிவிட முடியுமெனவும் சாடினார்.

இந்த திருத்தத்துக்கு ஒருபோதும் 2/3 பெரும்பான்மை ஆதரவு கிடைக்காதன தெரிவித்த அவர்,  அரசாங்கத்துக்குள் உள்ள குழுவினரே 20 க்கு எதிராக வாக்களிக்க தீர்மானித்துள்ளதாகவும் தெரிவித்தார். 

அதனால் பிரதான எதிர்க்கட்சி என்ற வகையில் ஐக்கிய மக்கள் சக்தி 20 ஆவது திருத்தச் சட்டமூலம் கொண்டுவரப்பட்ட நாள் தொடக்கம் அதற்கு எதிரான போராட்டத்தை ஆரம்பித்திருந்ததெனவும், இனிவரும் காலங்களில் நாடாளுமன்றத்துக்கு வெளியிலும் அந்த போராட்டம் தொடருமெனவம் தெரிவித்தார்.