Print this page

இலங்கை இருளில் மூழ்கும் அபாயம்

September 21, 2020

அண்மையில் இலங்கை முழுவதும் ஏற்பட்டதை போன்று மீண்டும் மின் தடை ஏற்படக் கூடும் என இலங்கை மின்சார சபையின் பொது மேலாளரினால் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தேசிய மின்சார கட்டமைப்பில் உள்ள ஒழுங்கற்ற திட்டம் காரணமாக எதிர்வரும் நாட்களில் ஏற்படவுள்ள முழுமையான மின் தடையை தடுக்க முடியாதென அவர் அறிவித்துள்ளார்.

மின்சார சபையின் பிரதி பொது மேலாளர் சுஜீவ அபயவிக்ரம இது தொடர்பில் கடிதம் மூலம் மின்சார சபைக்கு அறிவித்துள்ளார்.

மின்சார சபை கட்டமைப்பு உரிய முறையில் திட்டமிட்டிருந்தால் சிறு தவறு ஏற்பட்டாலும் கட்டமைப்பு முழுமையான செயலிழக்காது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த விடயத்தை சரிப்படுத்தவில்லை என்றால் எதிர்வரும் காலங்களில் நாடு இந்த நிலைமைக்கு முகம் கொடுக்க நேரிடும் என அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.