வருங்கால கணவருடன் ஹனிமூன் செல்ல ஆசைப்பட்டு அதற்கு பணம் சம்பாதிக்க குறுக்குவழியில் இறங்கிய பெண் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த 28 வயது பெண் ஒருவர் தனது வீட்டில் போதைப்பொருளை பதுக்கி வைத்திருப்பதாக அக்கம்பக்கத்தினர் பொலிஸாருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.
இதனை அடுத்து அந்த பெண்ணின் வீதிக்ரு வந்த பொலிஸார் அப்பெண்ணின் வீட்டை சோதனை செய்ய முற்பட்டுள்ளனர்.
அப்போது பொலிஸார் தன் வீட்டிற்கு வருவதை உணர்ந்த அந்த பெண் அவர்கள் வருவதற்கு முன்னதாக போதை பொருட்களை மறைத்துவைப்பதற்காக கழிவறையின் உள்ளே கை விட்டவாறு இருந்ததை பொலிஸ் அதிகாரி ஒருவர் கவனித்துள்ளார்.
இதனால் மேலும் சந்தேகம் அடைந்த பொலிஸார் கழிவறைக்கு வரக்கூடிய குழாயை உடைத்து அதனை சோதனை செய்தபோது, அந்த குழாய்க்குள் 220 ஹெராயின் மற்றும் கொக்கை போதை பொருட்கள் அடங்கிய பொட்டலங்கள் இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்து உள்ளனர்.
இதனையடுத்து அந்தப் போதை பொருட்களை கைப்பற்றிய பொலிஸார் அந்த பெண்ணை கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
பொலிஸார் நடத்திய விசாரணையில் அந்த பெண் தனக்கு இந்த மாதம் திருமணம் நடைபெற இருப்பதாகவும், திருமணம் முடிந்தவுடன் தனது வருங்கால கணவருடன் தேனிலவுக்கு செல்வதற்காக பணம் சேர்க்க இந்த போதைப் பொருட்களை விற்பனை செய்ய திட்டமிட்டு இருந்ததாகவும் பொலிஸாரிடம் கூறியுள்ளார்.
இதனையடுத்து போதைப் பொருள் விற்பனை செய்த குற்றத்திற்காக அந்த பெண்ணிற்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.