Print this page

கொழும்பு நீதிமன்றில் தீ

September 23, 2020

கொழும்பு மேல் மாகாண நிலையாய மூவரடங்கிய மேல் நீதிமன்ற கட்டிடத் தொகுதியில் இன்று காலை திடீர் தீ ஏற்பட்டுள்ளது.

கட்டிடத்தின் மேல் மாடியில் இந்த தீ பரவல் ஏற்பட்டுள்ளது.

விரைந்து செயற்பட்ட தீயணைப்பு பிரிவினர், தீயை கட்டுப்படுத்தியுள்ளனர்.

இந்த தீ ஏற்பட்டமைக்கான காரணம் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை.