Print this page

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் கைது?

September 24, 2020

கடந்த நல்லாட்சி அரசாங்கத்தில் வீடமைப்பு மற்றும் கலாசார அமைச்சராக பதவிவகித்த, தற்போதைய ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பி​ரேமதாஸவின் நிர்வாகத்தின் கீழ், ஆகக் கூடுதலான நிதி முறைக்கேடுகள் இடம்பெற்றுள்ளன என இராஜாங்க அமைச்சர் இந்திக அனுருத்த தெரிவித்தார்.

அதுதொடர்பில் தற்போது விசாரணைகள் மிகவும் துரித கதியில் முன்னெடுக்கப்படுகின்றன. அதில், சந்தேகத்தின் பேரில் சில கைதுசெய்யப்படவுள்ளனர். அது விரைவில் இடம்பெறும் என்றும் அவர் தெரிவித்தார்.

தனியார் தொலைக்காட்சி ஒன்றில் இடம்பெற்ற விவாதத்திலேயே  மேற்கண்டவாறு தெரிவித்த அவர், இது சம்பந்தமான முன்னெடுக்கவேண்டிய சகல சட்ட செயற்பாடுகளும் முன்னெடுக்கப்பட்டுவிட்டன என்றார்.

மறுபுறத்தில் பங்கேற்றிருந்த எஸ்.எம்.மரிக்கார், இதுதொடர்பில் சஜித் பிரேமதாஜவுக்கு எதிர்காலத்தில் கைது செய்யப்படுவாரா? என வினவினார்.

அவருக்கெல்லாம் சட்டமே பதில் சொல்லும் என்றார்.

Last modified on Friday, 23 October 2020 09:52