Print this page

13வது திருத்தம் குறித்து மோடி (வீடியோ)

September 27, 2020

இந்திய – இலங்கை பிரதமர்களுக்கும் இடையே இன்று இணைய தளத்தினூடாக கலந்துரையாடல் ஒன்று நடைபெற்றது. மஹிந்த ராஜபக்ஷ பிரதமரான பிறகு நடைபெற்ற முதல் உத்தியோகபூர்வ இராஜதந்திர கூட்டம் இதுவாகும்.

தற்போது விவாதிக்கப்பட்டு வரும் மாகாண சபைகள் குறித்த பேச்சுகள் இரு நாடுகளின் தலைவர்களது பேச்சில் இடம்பெற்றது.

மாகாண சபை முறையைத் தொடர வேண்டும் என்று இந்தியப் பிரதமர் வலியுறுத்தியுள்ளார். நரேந்திர மோடி 13 வது திருத்தத்தின் மூலம் மாகாண சபைகளுக்கு அதிகபட்ச செயல்படுத்தலுக்கு உட்படுத்துவது மற்றும் அதிகபட்ச அதிகாரப் பகிர்வை அமுல்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

இந்த கலந்துரையாடலில் வடக்கு மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்தும் கவனம் செலுத்தியதுடன், தமிழ் மக்களின் அபிலாஷைகளை பூர்த்தி செய்யும் வகையில் சமத்துவம், நீதி, நேர்மை மற்றும் நல்லிணக்கத்தை அடைய அரசியலமைப்பின் விதிகளை நிறைவேற்றுமாறு மோடி அவர்கள் கேட்டுக் கொண்டார்.

வட கடலில் இரு நாடுகளிலும் மீனவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்தும் கவனம் செலுத்தப்பட்டு, அந்தப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு இரு தரப்பிலிருந்தும் அதிகாரிகள் அடங்கிய ஒரு பொறிமுறையை அமைக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது.

கடந்த தேர்தலில் பெறப்பட்ட மூன்றில் இரண்டு பெரும்பான்மை ஆணை இந்திய-லங்கா உறவுகளை வலுப்படுத்தப் பயன்படும் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இந்தியப் பிரதமருக்கு உறுதியளித்தார்.

Last modified on Wednesday, 21 October 2020 14:39